கூடலூர் நகராட்சியில்வாரச்சந்தை கட்டுமான பணிக்கு பூமிபூஜை:எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
கூடலூர் நகராட்சியில் வாரச்சந்தை கட்டுமான பணிக்கான பூமிபூஜையை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
கூடலூர் நகராட்சி சந்தை திடலில் ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பில் 51 கடைகள், வாகன நிறுத்தம், தொழிலாளர் தங்கும் இடம், கழிப்பறை உள்ளடக்கிய புதிய வாரச்சந்தை மற்றும் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் பொது சுகாதார பிரிவு ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூடலூர் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் பூமிபூஜையில் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். மருத்துவ அலுவலர் முருகன், நகராட்சி, ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி, மருத்துவர் சுதா, கூடலூர் தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.