கோவில்பட்டியில் 3 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
கோவில்பட்டியில் 3 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பங்களா தெரு நகரசபை தொடக்கப் பள்ளியில் நேற்று காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகரசபை தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் 170 மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ் சரஸ்வதி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் நகரசபை ஆணையாளர் ராஜாராம், நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி, நகராட்சி நிர்வாக இணை ஆணையாளர் சாரதா, வட்டார கல்வி அதிகாரி முத்தம்மாள், நகரசபை பொறியாளர்கள் ரமேஷ், சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், வள்ளிராஜ், காஜா நஜூமுதீன், நகர சபையை கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் காலனி நகர சபை தொடக்கப்பள்ளியில் 70 மாணவ- மாணவிகளுக்கும், காந்திநகர் நகரசபை தொடக்கப் பள்ளியில் 76 மாணவ- மாணவிகளுக்கும் காலை உணவு திட்டத்தை நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அமிர்த வல்லி, உமா ஆகியோர் வரவேற்று பேசினர்.