கோவில்பட்டி புற்றுக் கோவிலில்அனுமன் ஜெயந்தி விழா

கோவில்பட்டி புற்றுக் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-12-23 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காலை 10 மணிக்கு கணபதி பூஜை, கும்ப கலச பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அனுமனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேகமும், வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை சாற்றி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்