கோவில்பட்டியில்தொழிலாளியிடம் செல்போன்பறித்த வாலிபர் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-15 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அத்தைகொண்டான் 2-வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் கதிர் (வயது 35). கூலித் தொழிலாளி. இவர் மந்தித்தோப்பு சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்த அவரை மிரட்டி செல்போன் மற்றும் ரூ.500- ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் வழக்குப்பதிவு ெசய்து சாஸ்திரி நகர் 4-வது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (வயது 26) என்பவரை கைது செய்து செல்போனை மீட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்