கோவில்பட்டியில் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம்

கோவில்பட்டியில் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம்

Update: 2023-07-29 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் கொம்பையா பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜன், நகர செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வருகிற ஆகஸ்டு 25-ந்தேதி கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை கிளை, நகரம், ஒன்றிய பகுதிகளிலும் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடவும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள் வழங்கவும், அன்னதானம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கள் மாரிச் செல்வம், ராஜபாண்டி, செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் காளிதாஸ், முருகன், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள் சாமி, பொன்ராஜ், தங்கச்சாமி, மாரியப்பன், அருண், நடராஜன், ஜெயகுரு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்