கொப்பம்பட்டியில்சமுதாய நலக்கூடம் திறப்பு விழா

கொப்பம்பட்டியில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-10-12 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

காமநாயக்கன்பட்டி அருகே உள்ள கொப்பம்பட்டியில் 2023-2024-ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், துணை தலைவர் கற்பகவள்ளிசெல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய கவுன்சிலர் மூக்கம்மாள்நயினார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கயத்தாறு யூனியன் தலைவர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். விழாவில் கயத்தாறு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, பாண்டியராஜன், பொறியாளர் சித்ரா, அ.ம.மு.க கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி பாண்டியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கர், கொப்பம்பட்டி ஊராட்சி செயலர் பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்