கயத்தாறில்மரக்கன்று நடும் நிகழ்ச்சி
கயத்தாறில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சி குட்டிகுளத்தில் இருபுறமும் குளக்கரையில் மரக்கன்றுகள் நடுதல், கடம்பூர் சாலையில் துப்புரவு பணியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டினார். இந்நிகழ்ச்சியில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆ.சின்னப்பாண்டியன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.