கயத்தாறில்பா.ஜ.க. விவசாய அணி கூட்டம்

கயத்தாறில் பா.ஜ.க. விவசாய அணி கூட்டம் நடந்தது.

Update: 2023-05-05 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் பா.ஜ.க. விவசாய அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன், மாநில திட்டப்பொறுப்பாளர் ராம்ஆச்சாரியா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூவானி முனியசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில், மாநில துணை தலைவர் ஜெயக்குமார், கன்னியாகுமரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ் குமார், மேற்கு ஒன்றிய தலைவர் கருப்பசாமி, விவசாய அணி ஒன்றிய தலைவர் அரிச்சந்திரன் மற்றும் கயத்தாறு, கோவில்பட்டி, எட்டையபுரம், தூத்துக்குடி, கருங்குளம், ஓட்டப்பிடாரம், உள்பட பல்வேறு ஒன்றியங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சீவலப்பேரி அருகே அணை கட்டி கயத்தாறு வட்டார பகுதியில் உள்ள விவசாய பணிகளுக்கும், கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண திட்டம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொதுச் செயலாளர் காசிமாரியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்