கடம்பூரில் ராஜகணபதி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா
கடம்பூரில் ராஜகணபதி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கயத்தாறு:
கடம்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகணபதி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 6 மணிக்கு கும்ப கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷே௳ம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, தளவாய்சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பன், அ.தி.மு.க. கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜயபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை இணைசெயலாளர் நீலகண்டன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோன்று, கடம்பூர் அருகே உள்ள திருமலாபுரம் வீர சக்கதேவி கோவில் வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோவில் நிர்வாகி சக்கராஜ் உட்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.