தூத்துக்குடி இனிகோ நகரில்நாட்டுநலப்பணித் திட்ட முகாம்
தூத்துக்குடி இனிகோ நகரில் பள்ளி மாணவர்களின் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நடந்தது.
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள இனிகோ நகரில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. வருகிற 31-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 11-ம் வகுப்பு மாணவர்கள் 25 பேர் கலந்து கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர்.
முகாம் தொடக்க விழாவுக்கு பள்ளி தாளாளர் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மில்ட்டன் மெல் வரவேற்று பேசினார். தலைமையாசிரியர் ஜான்பால் மாணவர்களிடையே சமூக சேவையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இனிகோநகர் பங்குத்தந்தை ஜேசுராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நாட்டு நலப்பணித்திட்ட உதவி அலுவலர் வெற்றிச் செல்வன் நன்றி கூறினார்.
2-ம் நாளான நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் செல்வம் பங்கேற்று மாணவர்களுக்கு களப்பணி குறித்து வழிகாட்டுதல் நெறிமுறைகளை எடுத்து கூறினார். தூத்துக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்து பேசினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர், உதவி அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர். மாணவர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.