தேனியில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்
தேனி மாவட்ட பா.ஜ.க. சார்பில், தமிழக அரசை கண்டித்து தேனி பங்களாமேட்டில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது
தேனி மாவட்ட பா.ஜ.க. சார்பில், தமிழக அரசை கண்டித்து தேனி பங்களாமேட்டில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். மாநில செயலாளர் மீனாதேவ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். உண்ணாவிரத போராட்டத்தில் நிர்வாகிகள், தி.மு.க. அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் பேசினர். இதில், தேனி மாவட்ட பார்வையாளர் பார்த்தசாரதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் மலைச்சாமி, மாரிச்சாமி, பாலு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், அரசு தொடர்பு மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.