தேனியில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்
தேனியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
தேனியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுதோறும் தேசியகொடி ஏற்றுவது, சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். மதுரை கோட்ட பொறுப்பாளர்கள் கதலி நரசிங்கப்பெருமாள், சுப.நாகராஜன், மாவட்ட பார்வையாளர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்துகொண்டு விழா ஏற்பாடுகள் குறித்து பேசினர். இதில், நகர தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.