கோபியில் திராவிடர் மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2022-11-04 19:58 GMT

இந்தி திணிப்பை கண்டித்து கோபியில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல மாணவர் கழக செயலாளர் சிவபாரதி தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தை சேர்ந்த மண்டல செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட காப்பாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மா.கந்தசாமி, திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம் மற்றும் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்தி திணிப்பை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட மாணவர் கழக தலைவர் சூர்யா, செயலாளர் எழில் அரசு உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்