கயத்தாறு வட்டாரத்தில் வேளாண் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு
கயத்தாறு வட்டாரத்தில் வேளாண் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு வட்டாரத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகைதீன், வேளாண்மை உதவி இயக்குனர் ஆ.சுரேஷ் ஆகியோர் இணைந்து வேளாண்மை துறை திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்பு நிலத்தை மேம்படுத்தி, விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தில், மக்காச்சோள பயிர் பயிரிடப்பட்டுள்ள தொகுப்பு இடத்தையும், திருமங்களக்குறிச்சியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் செயல் விளக்க திட்ட பணியனையும் பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டன் மூலம் பயறு வகை திட்டத்தின் கீழ் விசைத்தெளிப்பான் மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்கினர்.