தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்புஅனைத்து தொழிற்சங்கம் வாயிற் கூட்டம்

தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்புஅனைத்து தொழிற்சங்கம் வாயிற் கூட்டம் நடந்தது.;

Update:2022-12-28 00:15 IST

தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வாயிற் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளன மாநில இணை செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாச்சாமி, மண்டல செயலாளர் மகராஜன், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் கணபதி சுரேஷ், தலைவர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மின்வாரியத்தில் 1.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு பதவி உயர்வு, விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும், தொழிற்சங்கங்களை கலந்து பேசாமல் மறுசீரமைப்பு என்ற பெயரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் பொறியாளர் சங்க செயலாளர் அரியசெல்வம், ஐக்கிய சங்க பொருளாளர் ரமேஷ்பாண்டி, விடுதலை முன்னணி மாநில செயலாளர் சேகர் ஜெயபால், பார்வர்டு பிளாக் செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்