அண்ணாமலைநகர் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

அண்ணாமலைநகர் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-11 18:45 GMT

அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அண்ணாமலைநகர் மண் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுஜாதா (வயது 42). இவருடைய கணவர் ராமச்சந்திரன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினரான அண்ணாமலை நகர் கே.ஆர்.எம். நகரில் வசிக்கும் கண்ணன் என்பவர் தன்னை தாக்கியதாக அண்ணாமலை நகர் போலீசில் சுஜாதா புகார் செய்தார். இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் நேற்று மதியம் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சுஜாதா போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து கேனில் வைத்திருந்த மண்எண்ணெயை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த போலீசார் விரைந்து வந்து அவரிடமிருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து சுஜாதா கொடுத்த புகாரின்பேரில் கண்ணன் மீது அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுஜாதா மீதும் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்