கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்புகருகிய பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-21 18:45 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருகிய பயிர்களுடன் வந்து முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில உதவி செயலாளர் எஸ். நல்லையா தலைமை தாங்கினார். இதில் மாநில குழு உறுப்பினர் லெனின் குமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் ரவீந்திரன், தாலுகா தலைவர் பலராமன், பிச்சையா மற்றும் விவசாயிகள், பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகாக்களில் மானாவாரி நிலங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நடப்பு பருவத்தில் மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

பருவ மழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் பயிர்கள் மணி பிடிக்காமலும், படைப்புழு தாக்குதலாலும் கடுமையாக பாதிக்கப் பட்டது. இதின் மூலம் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், உளுந்து, பாசி பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டத்துக்குள்ளாகி இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து, நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்