ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புதிய 8 மாடி கட்டிடம் கட்டும் பணி தீவிரம்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புதிய 8 மாடி கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியை பல்நோக்கு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக ரூ.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 8 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடம் கட்டும் பணிகள் நிறைவடைந்து உள்ளது. கட்டிடத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்த ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை மற்றும் எலும்பு தொடர்பான சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன.