ஈரோடு கிழக்கு தொகுதியில்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்;அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2023-02-08 21:31 GMT

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

திண்ணை பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் வரகப்பா வீதியில் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒரு லட்சம் வாக்குகள்...

முன்னதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று நாங்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கின்றனர்.

இதை பார்க்கும்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார். திருமகன் ஈவெரா ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னென்ன பணிகளை மேற்கொண்டார் என்பது குறித்து துண்டு பிரசுரமாக அச்சடித்து, அதை பொதுமக்களிடம் வழங்கி வாக்குகள் சேகரித்து வருகிறோம்.

கை சின்னம்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நேசிக்கக்கூடியவராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அதனால் தான் பொதுமக்களிடம் மிகுந்த அனுபவம் கொண்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை இந்த தேர்தலில் போட்டியிட முதல்-அமைச்சர் நிறுத்தி உள்ளார். எனவே திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை மீண்டும் அவருடைய தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர நீங்கள் அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.எஸ்.உமரிஷங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட்செல்வின், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ஏ.மாரியப்பன், கவுன்சிலர்கள் சுதாகர், செல்வகுமார், வக்கீல் அணி துணை அமைப்பாளர் கிருபாகரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுகு உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்