கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர கூட்டம்
கூடலூர் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
கூடலூர் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர துணைத்தலைவர் கான்அப்துல் கபார் கான் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் சபீர்கான் வரவேற்றார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் அஜ்மீர் கான் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி, மாவட்ட பொருளாளர் அக்கிம் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொடக்க தினமான வருகிற 21-ந்தேதி மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல், ரத்ததான முகாம் மற்றும் மரம் நடுதல் என முடிவு செய்யப்பட்டது. மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் கட்சியின் நகர மற்றும் கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் காதர்மைதீன் நன்றி கூறினார்.