கூடலூர் பகுதியில்சொட்டுநீர் பாசனம் மூலம் செண்டு பூக்கள் சாகுபடி

கூடலூர் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் செண்டு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-09-22 18:45 GMT

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் ஒட்டிய பகுதிகளான கூடலூர், கழுதை மேடு, பெருமாள் கோவில் புலம், புது ரோடு, காஞ்சி மரத்துறை, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பென்ஷால் என்ற புதிய ரக செண்டு பூக்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவை சொட்டு நீர்பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வகை பூக்கள் நடவு செய்த 50 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். இதன் மூலம் 120 நாட்கள் வரை பலன் கிடைக்கும். இதற்கு ஊடு பயிராக வெங்காயம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட விழாக்காலங்களில் செண்டு பூக்களின் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்