தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை
தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்த பா.ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ். இவரது ஆம்னி பஸ் மீது நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பு ரோட்டில் விழுந்து பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. இதுதொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று 40 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சந்தேகப்படும்படியாக வரும் நபர்களை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.