சிதம்பரத்தில் தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு-உறவினர்கள் தர்ணா

சிதம்பரத்தில் தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தொிவித்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-02-16 18:45 GMT

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் பள்ளிப்படை ரஜிபூர் நிஷா நகரை சேர்ந்தவர் யாசிம் (வயது 36). கவரிங் நகை தொழிலாளி. இவருக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு யாசிமை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சிதம்பரம் நகர போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து யாசிமின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இதற்கு யாசிமின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தர வேண்டும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை போலீசார் ஏற்கவில்லை. இதையடுத்து யாசிமின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் யாசிமின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தரக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை பிரேத பரிசோதனை செய்து தான் தரப்படும் என கூறினார்கள். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் யாசிமின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்