சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.!
லைகா நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 8 மணி முதல் சென்னையில் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, சட்ட விரோதமான பண பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. துணை ராணுவத்தின் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.