பூவானி கூட்டுறவு சங்கத்தில்மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பூவானி கூட்டுறவு சங்கத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-09-29 18:45 GMT

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மூலம் 100 இடங்களில் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்டம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கருங்குளம் வட்டாரத்தில் உள்ள பூவாணி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சிறப்பு உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் பொ.நடுக்காட்டுராஜா தலைமை தாங்கி, சங்க உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.58 லட்சம் மதிப்பிலான கடன்களை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் அ. சாம்டேனியல்ராஜ் வரவேற்று பேசினார். தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் போ.ரவீந்திரன், கூட்டுறவு சங்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து பேசினார். மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய விரிவுரையாளர் கதிரவன் புதிய உறுப்பினர் சேர்க்கையின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். சங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் பொ.சுந்தரேசுவரன், உதவி பொதுமேலாளர் தாமோதரன் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்