பவானிசாகரில் தையல் கடையில் தீ விபத்து

தீ விபத்து

Update: 2022-11-09 20:21 GMT

பவானிசாகர் கல்கொத்து பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 49). இவர் பவானிசாகர் மார்க்கெட் சதுக்கம் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவு திடீரென தையல் கடையில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கடை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த 3 தையல் எந்திரங்கள், தைப்பதற்காக வைத்திருந்த துணிகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்