ஆசனூரில் அனுமதியின்றி செயல்பட்ட 2 விடுதிகளுக்கு 'சீல்'

ஆசனூரில் அனுமதியின்றி செயல்பட்ட 2 விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2023-10-15 00:43 GMT

தாளவாடி 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில தங்கும் விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் ராணி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆசனூர் பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 தங்கும் விடுதிகள் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 2 விடுதிகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்