அந்தியூரில்போதை ஊசி செலுத்திக்கொண்ட 5 வாலிபர்கள் கைது

அந்தியூரில் போதை ஊசி செலுத்திக்கொண்ட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-09-05 21:40 GMT

அந்தியூர்

அந்தியூர் தவுட்டுப்பாளையம் ரோஜா நகர் முள் காடு பகுதியில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 5 வாலிபர்கள் போதை ஊசியை தனக்குத் தானே செலுத்திக்கொண்டு இருந்ததை பார்த்தனர். உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் அத்தாணி தம்பங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் சிவா பாலாஜி (வயது 20), அத்தாணி பகுதியை சேர்ந்த பாலாஜி (24), கெஞ்சனூர் பகுதியைச் சேர்ந்த சசிந்தர் (22), தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (19), தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (24) ஆகியோர் என்பதும், போதை வரக்கூடிய மாத்திரைகளை ஆன்லைன் மூலம் விலை கொடுத்து வாங்கி அவற்றை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் தனக்குத்தானே செலுத்திக்கொண்டதும் தெரியவந்தது. அதை்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய சிரஞ்ச் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்