அந்தியூர்
அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி பகுதி விவசாயிகள் 2.360 தார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் கதலி கிலோ ரூ.45-க்கும், நேந்திரம் ரூ.20-க்கும், செவ்வாழை ஒரு தார் ரூ.650-க்கும், பூவன் ரூ.720-க்கும், ரஸ்தாலி ரூ.650-க்கும், மொந்தன் ரூ.300-க்கும், தேன்வாழை ரூ.420-க்கும், ரொப்பஸ்டா ரூ.340-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 29 ஆயிரத்து 100-க்கு விற்பனையானது. ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி, சத்தியமங்கலம், திருப்பூர் மற்றும் கேரள, கர்நாடக மாநில வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் கூறி வாங்கிச்சென்றனர்.