கணவர் இறந்த வேதனையில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

கணவர் இறந்த வேதனையில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

Update: 2023-06-09 19:16 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள அயலூரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 29). விவசாயி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் வேலுச்சாமி இறந்துவிட்டார்.

கணவர் இறந்த பின்னர் முத்துலட்சுமி வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து கடந்த மாதம் 31-ந் தேதி முத்துலட்சுமி விஷம் குடித்துவிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்