செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் 75-வது சுதந்திர ஆண்டையொட்டி சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை சுவர் தேசியக்கொடி நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் 75-வது சுதந்திர ஆண்டையொட்டி சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை சுவர் முழுவதும் தொல்லியல் துறை ஏற்பாட்டில் தேசியக் கொடி நிறத்தில் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.

Update: 2022-08-08 14:28 GMT

மாமல்லபுரம்,

டச்சு கோட்டை

செங்கல்படடு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சதுரங்கப்பட்டினம், கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு நகரமாக உள்ளது. இந்த ஊரை துறைமுகபட்டினமாக கொண்டு டச்சுக்காரர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.

14-ம் நூற்றாண்டில் ராஜநாராயணபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் 16-ம் நூற்றாண்டில் சதுரங்கப்பட்டினம் என்று மாற்றப்பட்டது. இங்குள்ள சதுரங்க வடிவில் பரந்து விரிந்து, பெரிய மதில் சுவர்களுடன் டச்சு கட்டிடக்கலையின் கீழ் கட்டப்பட்ட டச்சு கோட்டையில் டச்சுக்காரர்கள் வாழ்ந்து வந்தனர். மத்திய தொல்லியல் துறையினர் இந்த டச்சுகோட்டையை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.

வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டியும், 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டியும் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் டச்சு கோட்டை முழுவதும் அதன் உயரமான சுவர்களை அலங்கரிக்கும் வகையில் தொல்லியல் துறை சார்பில் தேசிய கொடியின் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறத்திலான விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு டச்சு கோட்டை சுவர் முழுவதும் ஜொலிக்கும் விளக்குகளால் இரவு நேரங்களில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மின் விளக்கு வெளிச்சத்தில் பிரகாசமாக காட்சி அளிக்கும் டச்சு கோட்டையின் அழகை பார்த்து ரசித்து விட்டு செல்வதை காண முடிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்