நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை தண்டனை
சிவகிரி அருகே நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி அருகே தென்மலை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் காசி என்ற காசி பாண்டி (வயது 25). இவர் கஞ்சா விற்பனை வழக்கில் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 25-1-23 அன்று அவரிடம் இருந்து நன்னடத்தை பிணை பெறப்பட்டது. பின்னர் வெளியே வந்த காசி பாண்டி கடந்த 7-ந் தேதி தென்மலையில் தெற்கு தெருவை சேர்ந்த அழகர் (53) என்பவரிடம் தகராறு செய்து கண்ணாடி பாட்டிலால் தாக்கினார். இதுகுறித்து அழகர், சிவகிரி போலீசில் புகார் செய்ததின் பேரில் காசி பாண்டி மீண்டும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நன்னடத்தை பிணையை மீறியதாக சிவகிரி தாசில்தார் பழனிச்சாமி உத்தரவின் பேரில் காசி பாண்டிக்கு மேலும் 139 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.