அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தவருக்கு சிறை தண்டனை

அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-11-08 19:37 GMT

நெல்லையில் கடந்த 12.11.2017-ம் ஆண்டு நடந்த அரசு விழாவில் கலந்துவிட்டு வாசுதேவநல்லூர் பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் தனது அலுவலக பெண் ஊழியர்கள் 2 பேர் உள்பட 7 பேருடன் ஜீப்பில் வாசுதேவநல்லூர் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது வெங்கலபொட்டல் பஸ்நிறுத்தம் அருகே சென்ற போது, பாளையங்கோட்டை கக்கன் நகர் வள்ளுவர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பவர் வந்த ஆட்டோ ஜீப்பில் உரசியதாக கூறி ஜீப்பை சேதப்படுத்தி, அதில் இருந்த பெண் ஊழியர்கள் உள்ளிட்டவர்களை அசிங்கமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு ஒரு வருட சிறை தண்டனை மற்றும் ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதில் அபராத தொகையில் பாதிக்கப்பட்ட 3 பெண் ஊழியர்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்