சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததச்சு தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனைசேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

Update: 2023-08-22 20:01 GMT

சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தச்சு தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தச்சு தொழிலாளி

சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). தச்சு தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறை தண்டனை

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் போலீசார் சார்பில் கோர்ட்டில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக பழனிக்கு, 2 பிரிவுகளின் கீழ் தலா 7 ஆண்டு வீதம் 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்