ஓசூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 70 மனுக்கள் மீது உடனடி தீர்வு

மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து பெற்றார்.;

Update:2023-06-10 13:39 IST

ஓசூர் ,

ஓசூரில், தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியின்போது, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனைபபட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி 134 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் வழங்கினர்.

தொடர்ந்து நேற்று வரை பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 1,057 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 70 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன. இதைத்தொடர்ந்து, தாலுகா அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸவரி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பட்டா, சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் இதில், தாசில்தார் சுப்பிரமணி, தனி தாசில்தார் பெருமாள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்