பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு, தஞ்சை டி.ஐ.ஜி. ஜெயசந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு, தஞ்சை டி.ஐ.ஜி. ஜெயசந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சை சரக டி.ஐ..ஜி. ஜெயசந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தஞ்சை சரகத்தை சேர்ந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ்குமார் (திருவாரூர்), ஆஷிஷ்ராவத் (தஞ்சை), ஹர்ஷ் சிங் (நாகை), மீனா (மயிலாடுதுறை) மற்றும் 4 மாவட்டங்களை சேர்ந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயசந்திரன் பேசியதாவது:-
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுடன், போலீசார் எப்போதும் நல்லுறவை பேண வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நிகழாத வண்ணம் தடுப்பு நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை மற்றும் வழிபறி வழக்குகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து உரிய ஆய்வு செய்தார்.