இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம்

கியூ.எஸ். நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய அளவில் சென்னை ஐ.ஐ.டி.க்கு 6-வது இடமும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 10-வது இடமும் கிடைத்துள்ளது.;

Update:2023-06-29 16:08 IST

கியூ.எஸ். நிறுவனம்

லண்டனை சேர்ந்த 'கியூ.எஸ்.' என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 20-வது பதிப்பாக கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்-2024-ஐ அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பியா, அமெரிக்கா, ஓசினியா போன்ற மண்டலங்களில் 104 பகுதிகளில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.

அண்ணா பல்கலைக்கழகம்

இதில் இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களாக மொத்தம் 45 நிறுவனங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதில் மும்பை ஐ.ஐ.டி. முதலிடத்தை பெற்றுள்ளது.

6-வது இடத்தை சென்னை ஐ.ஐ.டி. பெற்றுள்ளது. இந்த வரிசையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 12-வது இடத்திலும் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்