இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
கடையநல்லூரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பேட்டை கிளை தலைவர் நிரஞ்சன் ஒளி தலைமையில் நடைபெற்றது. நோன்பு திறப்பதற்காக தமிழ்நாடு அரசு சலுகை விலையில் வழங்கிய பச்சரிசி மூலம் நோன்பு கஞ்சி தயார் செய்து மாலை நேரத்தில் நோன்பு திறக்க வரும் சுமார் 300-க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதுபோன்று பெண்கள் வீடுகளிலே நோன்பு திறக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேட்டை கிளை நிர்வாகிகள் நல்லூர் சுலைமான், மில்லத், மசூது ஆகியோர் செய்திருந்தனர்.