மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.

Update: 2023-08-14 18:21 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) அரக்கோணம் தாலுகா மின்னல் ஊராட்சி சாலை கைலாசபுரம் கிராமத்தில் உள்ள என்.எல்.பி. திருமண மண்டபத்திலும், 19-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலும் முகாம் நடைபெற உள்ளது.

அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும் யூ.டி.ஐ.டி. அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் ரேஷன் அட்டை நகலுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்