ராணிப்பேட்டையில் 247 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

ராணிப்பேட்டையில் நடந்த முகாமில் 247 மாற்றுத்திறனா்ளிகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

Update: 2023-09-19 19:06 GMT

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டையில் நடந்த முகாமில் 247 மாற்றுத்திறனா்ளிகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

அடையாள அட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 380 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 247 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டையை கலெக்டர் வளர்மதி வழங்கினார். எஞ்சியுள்ள 162 பேருக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவும், 30 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

கோரிக்கை மனு

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை வேண்டி 13 மாற்றுத்திறனாளிகளும், வங்கிக் கடனுதவி வேண்டி 22 மாற்றுத்திறனாளிகளும், வேலைவாய்ப்பு வேண்டி 32 மாற்றுத்திறனாளிகளும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 12 மாற்றுத்திறனாளிகளும் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த சிறப்பு முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், அலுவல பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்