போலீசை தாக்கிய ஐ.டி. ஊழியர் உள்பட 2 பேர் கைது

போலீசை தாக்கிய ஐ.டி. ஊழியர் உள்பட 2 பேர் கைது

Update: 2023-09-02 19:15 GMT

சுந்தராபுரம், செப்.3-

கோவை சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் பத்ரகாளி (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவில் செட்டிப்பாளையம் ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது 2 பேர் காருக்குள் அமர்ந்து கொண்டு மது குடித்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீஸ்காரர் பத்ரகாளி, அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பத்ரகாளி தனது செல்போனில் அவர்களை வீடியோ எடுக்க முயன்றார். அப்போது அவர்கள் இருவரும் அவரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரரை தாக்கிய போத்தனூர் ஈஸ்வரன் நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சிவசங்கரன் (32), இந்திரா நகரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஸ்ரீவிக்னேஷ் (30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்