டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை பரிந்துரை
மக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை மாற்றி அமைக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை பரிந்துரைத்துள்ளது.
மதுரை,
மக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை மாற்றி அமைக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை பரிந்துரைத்துள்ளது. மேலும் மது விற்பவர்களுக்கு காவல்துறையினர் உரிய உரிமம் வழங்கி விற்பனை செய்யவும் நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும் வேண்டும் என்று கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மகாதேவன், சத்தியநாராயண பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.