ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை" என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-06-06 14:52 GMT

சென்னை,

'ஜெய்பீம்' படம் குறித்து முத்தமிழ் பேரவையின் விருது வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தை பார்க்க வேண்டும் என சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். படத்தை பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை. எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படம் பலரின் மனசாட்சியை உலுக்கியது. ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன். அதனால் மற்றவர்களை விட என்னை அந்த படம் கூடுதலாக பாதித்தது.

மக்களுக்காக கலைகள் இருக்க வேண்டும். கலையில் மூடநம்பிக்கைகளை விதைக்கக்கூடாது. இசை நிகழ்ச்சிகளில் தமிழ்பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என்று வலியுறுத்திய இயக்கம் திமுக என்றார்.

தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் கூறியதாவது:-

ஜெய்பீம் படத்தை பார்த்த பின் முதல்-அமைச்சரின் உத்தரவு மிக முக்கியமானது, முகவரி அற்றவர்களுக்கு முகவரி தந்த முதல்-அமைச்சருக்கு நன்றி. எங்கு சென்றாலும் தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் பழங்குடி மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்