கடன் தொல்லையால் கணவர் சாவு-மனைவிக்கு தீவிர சிகிச்சை

வேலை செய்யும் இடத்திற்ேக சென்று கடன் தொகையை திரும்ப கேட்டதால் மனமுடைந்த தம்பதி விஷத்தை குடித்த நிலையில் கணவர் இறந்து விட்டார்.

Update: 2023-09-02 19:22 GMT

வேலை செய்யும் இடத்திற்ேக சென்று கடன் தொகையை திரும்ப கேட்டதால் மனமுடைந்த தம்பதி விஷத்தை குடித்த நிலையில் கணவர் இறந்து விட்டார்.

கூலித்தொழிலாளர்கள்

திருப்பத்தூரை அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்து என்கிற ராஜா (வயது 58). இவருடைய மனைவி ஜெயா (50). கணவன்-மனைவி இருவரும் காக்கங்கரை பகுதியில் நர்சரி கார்டன் பகுதியில் தின கூலிகளாக வேலை செய்தனர்.அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் இதய அறுவை சிகிச்சைக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கடன் தொகையில் ரூ. 6 ஆயிரத்தை கட்டாத காரணத்தாத்தால் கடன் கொடுத்தவர், காக்கங்கரை பகுதியில் அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பணத்தை கட்டுங்கள் என கேட்டதாக கூறப்படுகிறது

இதனால் மனமுடைந்த இருவரும் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டனர். இதில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்களை அங்கு வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறப்பு

இருவரையும் டாக்டர்கள் பரிசோதித்தபோது ராஜா இறந்து விட்டதாக தெரிவித்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

அவரது மனைவி ஜெயா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்