பெண்ணை கத்தியால் குத்திய கணவர் கைது
பெண்ணை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
திசையன்விளை மன்னர்ராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி மேகலா (வயது 29). இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு மணிகண்டன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று மேகலா அவரது தாயாரிடம் செல்போனில் பேசிகொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த மணிகண்டன், யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறாய்? என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன். மேகலாவை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திசையன்விளை போலீசில் மேகலா புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.