திண்டிவனம்
திண்டிவனம் அருகே உள்ள கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் கமல்ராஜ்(வயது 34). மது குடிக்கும் பழக்கம் உடைய இவர் அவரது மனைவி விஜயலட்சுமியிடம்(27) அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வந்த கமல்ராஜிடம் ஏன் தினமும் குடித்து விட்டு வருகிறீர்கள் என விஜயலட்சுமி தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி விஜயலட்சுமியை தாக்கினார். இது குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கமல்ராஜை கைது செய்தனர்.