பெண்ணை தாக்கிய கணவர் கைது
சுல்தான்பேட்டையில் பெண்ணை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.;
சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 32). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா(28). இவர் கடந்த 4-ந் தேதி அங்குள்ள தேவாலயத்துக்கு சென்றுவிட்டு தாமதமாக வீடு திரும்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், எங்கு சென்று ஊர் சுற்றிவிட்டு வருகிறாய்? என்று கேட்டு சித்ராவை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சித்ரா கொடுத்த புகாரின்பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர். தாக்குதல்