மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம்

மேலப்பாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-26 18:47 GMT

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேலப்பாளையத்தில் நடந்தது. மாநில துணைச்செயலாளர் நெல்லை நிஜாம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நிலாஇக்பால் வரவேற்றார். இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாய் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பாளையங்கோட்டை முதல் பாபநாசம் வரையிலான நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை வனத்துறை கவனத்தில் கொண்டு புலிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். பாளையங்கால்வாயை தூர்வாரி சீரமைக்க அரசு ஒதுக்கிய நிதியை அதற்காக முழுமையாக செலவு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஜாஹிர் உசேன், தென்காசி மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அஜ்மீர் காஜா, நெல்லை மாநகர மாவட்ட பொருளாளர் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்