என்எல்சி பொது மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்கான அதிநவீன மருத்துவ கருவி மனிதவளத்துறை இயக்குனர் தொடங்கி வைத்தார்

என்எல்சி பொது மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்கான அதிநவீன மருத்துவ கருவியை மனிதவளத்துறை இயக்குனர் தொடங்கி வைத்தார்.;

Update:2023-03-10 00:15 IST

மந்தாரக்குப்பம், 

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா பொதுமருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் மூலம், நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், மருத்துவமனையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் சிறுநீரக சிகிச்சைக்கான 3 ரத்த சுத்திகரிப்பு கருவிகளும், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைக்களுக்கான அதிநவீன கருவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சிகிச்சை கருவியை என்.எல்.சி. மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூபம் தொடங்கி வைத்தார்.

சிறுநீரக சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்ட நேற்றுமுன்தினம் முதல் 12 அதிநவீன சுத்திகரிப்பு கருவிகள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக தொடங்கப்பட்ட அதிநவீன கருவியை கொண்டு காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக கண்டறிய முடியும்.

நிகழ்ச்சியில் என்.எல்.சி. இந்தியா மனித வளத்துறை செயல் இயக்குனர்கள் சதீஷ் பாபு, சத்தியமூர்த்தி மருத்துவமனையின் பொது கண்காணிப்பாளர் டாக்டர் தாரணி மவுலி மற்றும் உயர் அதிகாரிகள், செவிலியர்கள் மருந்தாளுநர்கள், இதர அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்