மரம் வேரோடு சாய்ந்து வீடு சேதம்

மரம் வேரோடு சாய்ந்து வீடு சேதம்

Update: 2022-11-13 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலையில் நேற்று முன்தினம் இரவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது வீட்டின் மீது அருகில் நின்ற மரம் ஒன்று வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில் வீடு சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில்விரைந்து வந்த ஊழியர்கள், மரத்தை வெட்டி அகற்றினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்